கிரிமியா இணைக்கப்பட்ட எட்டாவது ஆண்டு நிறைவையொட்டி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 200,000 மக்கள் முன்னிலையில் பேசினார். மாஸ்கோவில் உள்ள பிரமாண்ட விளையாட்டு அரங்கில் நெரிசலாக மக்கள் நிறைந்திருந்த மைதானத்தில் தனது உரையை நிகழ்த்தினார்.
"கிரிமியாவில் வசிப்பவர்கள் தங்கள் வரலாற்று தாயகமான ரஷ்யாவுடன் தங்கள் நிலத்தில் வாழ விரும்புகிறார்கள். எனவே நாஜிகளை எதிர்த்து அவர்கள் சரியானதைச் செய்தார்கள்". என அவர் தனது உரையைத் தொடங்கினார். "எங்கள் திட்டங்களை செயல்படுத்துவோம். கிரிமியாவின் இந்தப் பிரதேசங்களை நாங்கள் மீண்டும் உயிர்ப்பித்துள்ளோம்" என்றார்.
மேலும் "இப்போது என்ன செய்வது, எப்படி, யாருடைய செலவில், எங்கள் திட்டங்களை செயல்படுத்துவோம் என்பது எங்களுக்குத் தெரியும். டான்பாஸின் குடிமக்கள் வான்வழித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதைத்தான் நாங்கள் இனப்படுகொலை என்று அழைக்கிறோம். அதைத் தவிர்ப்பதே உக்ரைனில் நமது ராணுவ நடவடிக்கையின் குறிக்கோள் எனக் கூறிய ரஷ்ய ஜனாதிபதி பைபிளை மேற்கோள் காட்டி, "ஒருவருடைய நண்பர்களுக்காக ஒருவரின் உயிரைக் கொடுப்பதை விட பெரிய அன்பு எதுவும் இல்லை." எனக் குறிப்பிட்டார்.