இடா புயல் காரணமாக அமெரிக்க வட கிழக்கு மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் பல்வேறு மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதேவேளை நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது, அத்தோடு இந்த புயல் தீவிரத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள் மூடப்பட்டும் நெவார்க், லாகார்டியா மற்றும் ஜேஎப்கே ஆகிய பகுதிகள் அருகே அமைந்துள்ள விமான நிலையங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தி பிராங்க்ஸ் மற்றும் குயின்ஸ் ஆகிய நகரங்களின் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளது.
அந்நாட்டு மக்களை பாதுகாப்பாக வீடுகளில் இருக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.