கடந்த நூற்றாண்டின் உலகப் புகழ் பெற்ற மிக முக்கியமான இயற்பியலாளர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டீன் ஆவார்.
இவரது பொது மற்றும் சிறப்பு சார்புக் கொள்கைகள் தான் நவீன இயற்பியலின் ஈர்ப்பு விசை தொடர்பான புரிதல்களுக்கும், பிரபஞ்சவியலுக்கும் (Cosmology) GPS நேவிகேஷன் போன்ற தொழிநுட்பங்களுக்கும் அடிப்படையாகும்.
இவர் கைப்பட எழுதியிருந்த பொதுச் சார்புக் கொள்கை கோட்பாடுகள் மற்றும் சமன்பாடுகள் அடங்கிய நோட் புத்தகம் ஒன்று பாரிஸில் செவ்வாய்க்கிழமை $13 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப் பட்டுள்ளது. சுமார் 54 பக்கங்கள் அடங்கிய இந்த நோட் முதலில் 2 முதல் 3 மில்லியனுக்கு இடைப்பட்ட விலையில் தான் ஏலத்தில் விடப் பட்டது.
இந்த நோட்டில் அரைப் பங்கு ஐன்ஸ்டீன் கைப்பட எழுதியிருந்த எழுத்துக்களால் ஆனதாகும். இதுவரை நாளும், ஐன்ஸ்டீனின் அகெடமி உறுப்பினரும், நெருங்கிய நண்பருமான சுவிஸ் விஞ்ஞானியான மிக்கேலே பெஸ்ஸோ என்பவரால் இந்த நோட் பாதுகாக்கப் பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
1919 ஆமாண்டுக்கு முந்திய இது போன்ற ஐன்ஸ்டீன் கைப்பட எழுதிய நோட்டுக்கள் மிக மிக அரிதாகவே பாதுகாக்கப் பட்டு வருகின்றன.