சமீபத்தில் இத்தாலியில் சுமார் 11 டைனோசர் கூட்டங்களின் புதை படிமம் (Fossils) முதன் முறையாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இதுவே இத்தாலியில் கண்டுபிடிக்கப் பட்ட மிகப் பெரிய மற்றும் முழுமையான டைனோசர் புதை படிமம் ஆகும். 1990 களில் இருந்து இத்தாலியின் வெவ்வேறு பாகங்களில் டைனோசர் சுவடுகள் அகழ்ந்தெடுக்கப் பட்டு வருகின்றன.
இந்நிலையில் வடகிழக்கு துறைமுக நகரான ட்ரியெஸ்ட்டே இன் பெஸ்கட்டோரே என்ற கிராமத்தில் தான் புதைபடிம ஆய்வாளர்களால் இந்த புதிய முழுமையான டைனோசர் சுவடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இந்த முழுமையான எலும்பு சுவடானது 80 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த 5 மீட்டர் நீளம் வரை வளரக் கூடிய Tethyshadros insularis என்ற இனத்தைச் சேர்ந்த டைனோசரின் உடையது ஆகும்.
இத்தாலி - சுவிஸ் இன்று முதல் மாற்றம் பெறும் கோவிட் பாதுகாப்பு நடைமுறைகள் !
இதே கிராமப் பகுதியில் முன்னதாக 1996 ஆமாண்டு முதன் முதலாக ஓர் டைனோசரின் எலும்புச் சுவடுகள் அகழ்ந்தெடுக்கப் பட்டிருந்தது. 80 மில்லியன் வருடங்களுக்கு முன்பு பண்டைய மத்திய தரைக் கடல் பகுதியில் வாழ்ந்த மீன்கள், ஊர்வனக்கள், முதலைகள், பறக்கும் ஊர்வனக்கள் இன்னும் சிறிய ரக விலங்குகளது புதை படிம சுவடுகள் இத்தாலியின் இப்பகுதியில் ஏற்கனவே பெறப்பட்ட சுவடுகளில் அடங்குகின்றன.