உலகில் மக்கள் தொகை பெருமளவு உள்ள நாடுகள் சில சீனாவின் சொந்தத் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியைத் தமது மக்களுக்கு செலுத்தி வரும் நிலையில் இந்தத் தடுப்பூசி மீது புதிய சர்ச்சை தெரிவிக்கப் பட்டுள்ளது.
சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட புதிய ஆய்வொன்றின் மூலம், கோவிட்-19 பெரும் தொற்றில் இருந்து வயதானவர்களுக்கு குறைந்தளவு பாதுகாப்பே இந்த சினோபார்ம் தடுப்பூசி வழங்குவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளதே அந்த சர்ச்சையாகும்.
ஹங்கேரியில் சுமார் 450 பொது மக்கள் மீது இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதன் போது 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சுமார் 90% வீதம் கொரோனாவுக்கு எதிரான ஆண்டிபாடிகளை இந்த சினோபார்ம் மருந்து உருவாக்கும் போதும், இந்த வீதம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
80 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 50% வீதமானவர்களுக்கு இந்தத் தடுப்பு மருந்து எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.