free website hit counter

இங்கிலாந்தில் ஆபத்தான இந்திய கோவிட் திரிபினால் 2300 பேருக்கும் அதிகமானோர் தொற்று

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அண்மையில் கோவிட்-19 பெரும் தொற்றின் 2 ஆவது அலையால் உலகளவில் மிக மோசமான உயிரிழப்புக்களையும், பாதிப்பையும் சந்தித்து வரும் நாடாக இந்தியா மாறியுள்ளது.

இங்கு உருவான மிக வேகமாகப் பரவக்கூடிய ஆபத்தான கொரோனா வைரஸ் திரிபானது தற்போது பிற உலக நாடுகளிலும் பரவத் தொடங்கியிருப்பது சர்வதேசத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திங்கட்கிழமை வரை பிரிட்டனில் மட்டும் 86 மாவட்டங்களில், சுமார் 2323 பேருக்கும் அதிகமான பொது மக்கள் இந்தப் புதிய வகை கொரோனா திரிபால் பாதிக்கப் பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரிட்டனின் சுகாதரத் துறை செயலாளர் மேட் ஹாங்கொக் தெரிவித்துள்ளார். முக்கியமாக வடமேற்கு இங்கிலாந்தின் பொல்ட்டொன் மற்றும் பிளாக்பேர்ன் பகுதிகளில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் இரு மடங்கு அதிகமாக இந்தத் தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதும் கண்டறியப் பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து திரிபுபட்ட மொத்தம் 5 அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா திரிபுகள் இந்த 86 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது. முக்கியமாக பொல்ட்டனில் முதலாவது தடுப்பூசியேனும் இன்னமும் பெறாத பல மக்களில் அதிகபட்சமாக B.1.617.2 என்ற இந்திய திரிபு அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தற்போது பரவலாகத் தடுப்பூசி போடப்படும் நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ள நிலையில், புதிய வகைத் திரிபுகள் குறித்து மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என மேட் ஹாங்கொக் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் புதிய வகைத் திரிபின் அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்தில் ஜூன் 21 ஆம் திகதி வரை இறுதிக் கட்ட தளர்வுகள் ஒத்திப் போடப் பட்டுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். முன்னதாக ஏப்பிரல் 19 ஆம் திகதி இங்கிலாந்து வரவிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் ரத்து செய்யப் பட்ட அதே தினம் இந்தியாவை சிவப்புப் பட்டியலில் இங்கிலாந்து சேர்த்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உலக நாடுகளுக்கு கிட்டத்தட்ட 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உதவிக் கரம் நீட்டவுள்ளது அமெரிக்கா. முன்னதாக சுமார் 60 மில்லியன் ஆஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப் பட்டு வரும் நாடுகளுக்கு வழங்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்நிலையில் திங்கட்கிழமை அமெரிக்க அதிபர் பைடென் வெளியிட்ட அறிவிப்பில், இன்னும் 20 மில்லியன் மேலதிக கோவிட்-19 தடுப்பூசிகளை உலகுக்கு வழங்கவிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இவற்றில் பைசர், மாடர்னா மற்றும் ஜோன்சன் & ஜோன்சன் ஆகியவற்றின் தடுப்பு மருந்துகளும் அடங்குகின்றன.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 164 686 996
மொத்த உயிரிழப்புக்கள் : 3 412 388
குணமடைந்தவர்கள் : 144 805 014
ஆக்டிவ் தொற்றுக்கள் : 16 469 594
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 100 797

நாடளாவிய புள்ளி விபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 33 751 083 : மொத்த உயிரிழப்புக்கள் : 600 630
இந்தியா : 25 486 028 : 283 138
பிரேசில் : 15 661 106 : 436 862
பிரான்ஸ் : 5 898 347 : 108 040
துருக்கி : 5 139 485 : 45 186
ரஷ்யா : 4 957 756 : 116 575
பிரிட்டன் : 4 450 392 : 127 691
இத்தாலி : 4 167 025 : 124 497
ஸ்பெயின் : 3 619 848 : 79 502
ஜேர்மனி : 3 609 912 : 86 943
ஆர்ஜெண்டினா : 3 335 965 : 71 027
கொலம்பியா : 3 131 410 : 81 809
போலந்து : 2 856 924 : 71 920
ஈரான் : 2 779 415 : 77 532
மெக்ஸிக்கோ : 2 382 745 : 220 489
தென்னாப்பிரிக்கா : 1 615 485 : 55 260
கனடா : 1 336 275 : 25 008
பாகிஸ்தான் : 882 928 : 19 752
பங்களாதேஷ் : 782 129 : 12 211
சுவிட்சர்லாந்து : 683 400 : 10 747
இலங்கை : 146 936 : 981
சீனா : 90 894 : 4636

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula