free website hit counter

பங்களாதேஷில் லாக்டவுன் நீட்டிப்பு! : கட்டுப்பாடுகள் இறுக்கம்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பங்களாதேஷில் நடப்பில் இருக்கும் லாக்டவுனை இன்னமும் 10 நாட்களுக்கு நீடித்து அந்நாடு உத்தரவிட்டுள்ளதுடன் கோவிட்-19 பெரும் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளையும் இறுக்கமாக்கியுள்ளது.

ஏற்கனவே பல தடவை பங்களாதேஷில் நீட்டிக்கப் பட்ட லாக்டவுன் இந்த திங்கட்கிழமை முடிவடைவதாக இருந்த நிலையில் தான் இப்போது மீண்டும் நீட்டிக்கப் பட்டுள்ளது.

சமீப நாட்களாக பங்களாதேஷில் கோவிட்-19 தொற்று பல மாவட்டங்களில் அதிகரித்து வந்துள்ளதுடன் இதில் பல இந்திய எல்லையோர மாவட்டங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோவிட்-19 தொற்றை வெகுவாகக் கட்டுப் படுத்தும் விதத்தில் பங்களாதேஷில் முதலில் ஏப்பிரல் 5 முதல் மே 30 வரையும் பின்பு ஜுன் 6 வரையும் வாரத்தில் தொடர்ந்து 7 நாட்களும் அமுலில் இருந்தது. சிறிய ஆனால் சனத்தொகை அடர்த்தி அதிகமான நாடான பங்களாதேஷில் திங்கட்கிழமை 1970 புதிய தொற்றுக்களும், 30 உயிரிழப்புக்களும் பதிவாகின.

இதேவேளை சீனாவின் சினோவேக் என்ற தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டுக்கு 3 முதல் 17 வயதுடையை குழந்தைகளுக்குப் பயன்படுத்த உலக சுகாதாரத் தாபனம் அனுமதியளித்துள்ளது. சீனாவின் சினோவேக் தடுப்பூசி போடப் பட்டவர்களில் 51% வீதமானவர்களுக்கு அது நோய் அறிகுறிகளைத் தடுத்ததுடன், மருத்துவ உதவி தேவைப் படுபவர்களின் எண்ணிக்கையையும் குறைத்தது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க முன்னால் அதிபர் டிரம்ப் பதவி வகித்த போது, கோவிட்-19 இனை சீன வைரஸ் எனக் கூறி, கொரோனா தொற்றைப் பரப்பிய நாடு சீனா தான் என அவ்வப்போது தெரிவித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் சீன வைரஸால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சேதங்களுக்கு நட்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் அமெரிக்காவுக்கும், கோவிட்-19 இனால் கடுமையாகப் பாதிக்கப் பட்ட நாடுகளுக்கும் சுமார் 10 டிரில்லியன் டாலர்கள் நட்ட ஈட்டை சீனா கொடுக்க வேண்டும் என்று புதிய சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 174 399 881
மொத்த உயிரிழப்புக்கள் : 3 752 900
குணமடைந்தவர்கள் : 157 947 668
ஆக்டிவ் தொற்றுக்கள் : 12 699 313
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 86 440

நாடளாவிய புள்ளி விபரம் (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 34 227 237 : மொத்த உயிரிழப்புக்கள் : 612 701
இந்தியா : 28 996 949 : 351 344
பிரேசில் : 16 985 812 : 474 614
பிரான்ஸ் : 5 713 917 : 110 062
துருக்கி : 5 293 627 : 48 255
ரஷ்யா : 5 145 843 : 124 496
பிரிட்டன் : 4 522 476 : 127 841
இத்தாலி : 4 233 698 : 126 588
ஆர்ஜெண்டினா : 3 977 634 : 81 946
ஜேர்மனி : 3 710 341 : 89 965
ஸ்பெயின் : 3 707 523 : 80 236
கொலம்பியா : 3 593 016 : 92 496
ஈரான் : 2 971 270 : 81 183
போலந்து : 2 875 729 : 74 255
மெக்ஸிக்கோ : 2 434 562 : 228 838
தென்னாப்பிரிக்கா : 1 699 849 : 57 063
கனடா : 1 394 146 : 25 761
பாகிஸ்தான் : 935 013 : 21 376
பங்களாதேஷ் : 812 960 : 12 869
ஜப்பான் : 762 401 : 13 574
சுவிட்சர்லாந்து : 698 369 : 10 841
இலங்கை : 207 979 : 1789
சீனா : 91 300 : 4636

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction