free website hit counter

பிரேசிலில் கொரோனா உயிரிழப்புக்கள் 5 இலட்சத்தைத் தாண்டியது

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலகளவில் கோவிட் தொற்றுக்களால் 2 ஆவது அதிகளவு உயிரிழப்புக்களைச் சந்தித்த நாடான பிரேசிலில் மீண்டும் உருமாறிய கோவிட் வைரஸ் பரவி வருவதால் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

மேலும் அங்கு கொரோனா உயிரிழப்புக்கள் 5 இலட்சத்தைக் கடந்துள்ளன. தென்னமெரிக்க நாடுகளில் கோவிட்-19 வைரஸால் மோசமாகப் பாதிக்கப் பட்ட நாடு பிரேசில் ஆகும்.

உலகளவில் தொற்றுக்களில் இந்தியாவுக்கு அடுத்து 3 ஆவது இடத்தில் பிரேசில் உள்ளது. இங்கு கடந்த 24 மணித்தியாலத்தில் கோவிட் தொற்றுக்களுக்கு உள்ளாகி சுமார் 2247 பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட் 19 வைரஸ் பாதிப்பைக் கட்டுப் படுத்த ஆரம்பம் முதற் கொண்டே சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என பிரேசில் அதிபர் பொல்சனாரோ மீது அந்நாட்டு மக்கள் கடும் அதிருப்தியிலும், கோபத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வளைகுடா ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஓமானில் அண்மைக் காலமாக கோவிட் தொற்றுக்கள் அதிகரித்து வரும் காரணத்தினால் அங்கு இரவு முழுதும் மிகத் தீவிரமான ஊரடங்குக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் ஓமானில் பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்கப் படும் நடவடிக்கையும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஓமானில் தினசரி கொரோனா தொற்றுக்கள் கடந்த மாதம் 3 மடங்குக்கும் அதிகமாக அதிகரித்ததுடன் புது நோயாளிகளுக்கு வைத்திய சாலைகளில் படுக்கை மற்றும் மருத்துவ அதிகாரிகளின் பற்றாக்குறையும் ஏற்பட்டது.

இது தவிர இந்தியாவில் நோயாளிகளுக்கிடையே மிகத் தீவிரமாகப் பரவிய கருப்பூ பூஞ்சை என்ற தொற்றும் ஓமானில் சில கோவிட் நோயாளிகளுக்கு மத்தியில் இனம் காணப் பட்டுள்ளது.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 179 005 513
மொத்த உயிரிழப்புக்கள் : 3 876 667
குணமடைந்தவர்கள் : 163 522 333
ஆக்டிவ் தொற்றுக்கள் : 11 606 513
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 82 677

நாடளாவிய புள்ளி விபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 34 401 712 : மொத்த உயிரிழப்புக்கள் : 617 083
இந்தியா : 29 881 965 : 386 740
பிரேசில் : 17 883 750 : 500 868
பிரான்ஸ் : 5 755 496 : 110 724
துருக்கி : 5 365 208 : 49 122
ரஷ்யா : 5 316 826 : 129 361
பிரிட்டன் : 4 620 968 : 127 970
ஆர்ஜென்டினா : 4 258 394 : 88 742
இத்தாலி : 4 252 095 : 127 253
கொலம்பியா : 3 917 348 : 99 335
ஸ்பெயின் : 3 757 442 : 80 652
ஜேர்மனி : 3 729 557 : 90 953
ஈரான் : 3 086 974 : 82 854
போலந்து : 2 878 767 : 74 828
மெக்ஸிக்கோ : 2 475 705 : 231 151
தென்னாப்பிரிக்கா : 1 810 164 : 58 590
கனடா : 1 408 123 : 26 054
பாகிஸ்தான் : 947 218 : 21 940
பங்களாதேஷ் : 848 027 : 13 466
ஜப்பான் : 784 000 : 14 400
சுவிட்சர்லாந்து : 701 627 : 10 869
இலங்கை : 237 661 : 2534
சீனா : 91 587 : 4636

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction