உச்சிமாநாட்டில் உறுதிமொழிகள் அளிக்கப்பட்ட போதிலும், உலக வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்தும் இலக்குகளை உலகம் இன்னும் நெருங்கவில்லை என அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
உலகம் இன்னும் 2.4செல்சியல் பாகையில் வெப்பமயமாதலை நோக்கி செல்கிறது எனவும், இது 1.5செல்சியல் வரம்புக்குட்பட்ட நாடுகளை விட அதிகமாக உள்ளது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
உலக சராசரி வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய அளவை விட 2C அதிகரித்தால், ஒரு பில்லியன் மக்கள் அபாயகரமான வெப்பம் மற்றும் ஈரப்பதத்தால் பாதிக்கப்படலாம் என்று இங்கிலாந்தின் வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் இந்த கணிப்பு வந்துள்ளது. காலநிலை நடவடிக்கையை கணிக்கும் (CAT) இவ்வறிக்கை வெளியிட்டுள்ளது.
அத்தோடு கடந்த வாரம் ஐநா கூட்டத்தில் காடழிப்பை நிறுத்துவது உள்ளடக்கிய தொடர்ச்சியான பெரிய அறிவிப்புகளைத் தொடர்ந்து, இந்த கணிப்பு அதன் நம்பிக்கையுடன் முரண்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் 2030 ஆம் ஆண்டில், 1.5C டிகிரிக்குக் கீழே வெப்பநிலை உயர்வைத் தக்கவைக்க, பூமியை வெப்பமாக்கும் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகள் தேவையானதை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என இவ்வறிக்கை முடிவு செய்வதாகவும் கூறப்படுகிறது.
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த கிளாஸ்கோ உச்சி மாநாடு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. COP26 இந்த வாரம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது