free website hit counter

கிழக்கு சீனக் கடற்பரப்பில் கார்கோ கப்பல் மூழ்கியது! : 4 பேர் பலி, 7 பேர் மாயம்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஞாயிற்றுக்கிழமை காலை கிழக்கு சீனாவின் ஷடோங் மாகாணத்தில் யண்டாய் நகருக்கு அருகே கடற்பரப்பில் ஒரு கார்கோ கப்பல் நீரில் மூழ்கி விபத்தில் சிக்கியது.

இதில் 4 பேர் கொல்லப் பட்டதாகவும், 7 பேர் காணாமற் போயிருப்பதாகவும் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. 3 பேர் பாதுகாப்பாக மீட்கப் பட்டுள்ளனர்.

காணாமற் போய் இருப்பவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப் பட்டுள்ளது. அதிகாலை 4:43 இற்கு இடம்பெற்ற இந்த விபத்தின் போது கார்கோ கப்பலில் மொத்தம் 14 பேர் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction