free website hit counter

அத்திலாந்திக் கடல் படகு விபத்தில் 52 பேர் மாயம்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அத்திலாந்திக் கடலில் அகதிகளுடன் ஸ்பெயின் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த படகு சில தினங்களுக்கு முன் விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 52 பேர் மாயமாகியுள்ளனர்.

ஆப்பிரிக்காவின் ஐவரிகோஸ்டில் இருந்து ஸ்பெயின் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கனாரி தீவுகளில் இருந்து 220 கிலோ மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் மாத்திரம் நீந்திக் கொண்டிருந்த நிலையில் மீட்கப் பட்டுள்ளார். மோசமான கால நிலை காரணமாக குறித்த படகு விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று கருதப் படுகின்றது. 2021 ஆமாண்டின் முதல் 6 மாதங்களில் மாத்திரம் ஸ்பெயினுக்கான கடற் பாதையில், படகுகளில் பயணித்த அகதிகளில் சுமார் 250 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஐ.நா இன் அகதிகள் ஏஜன்ஸி தெரிவிக்கின்றது.

உலகளவில் இதே காலப் பகுதியில் கடலில் மரணித்த மொத்த அகதிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2000 என்றும் அகதிகளுக்கான உரிமைகள் அமைப்பு தெரிவிக்கின்றது. இந்த வருடம் இதுவரை சுமார் 7500 இற்கும் அதிகமான அகதிகள் இவ்வாறான ஆபத்தான பயணங்களை மேற் கொண்டுள்ளனர். இதே காலப் பகுதியில் 2020 ஆமாண்டு பயணித்த அகதிகளை விட இது 2 மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula