ஹாங்காங்கின் மிகப்பெரிய ஜனநாயக சார்பு பத்திரிகையான "ஆப்பிள் டெய்லி" தனது அச்சுப்பிரதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஹாங்காங்கின் ஆப்பிள் டெய்லி நாளிதழ் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் செயல்பாடுகளுக்கு எதிராக செய்தி வெளியிட்டு வந்ததாகவும்
அதப்பத்திரிகையின் பல அறிக்கைகள் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஹாங்காங்க் சுதந்திர தாகம் கொண்டவர்களுக்கு எழுச்சியூட்டும் விதமாக ஹாங்காங்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஆழமான தலையங்கங்களையும் கட்டுரைகளையும் பிரசுரித்துவந்தது.
இதன் தொடர்பில் குற்றச்சாட்டப்பட்டு ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் தலைமை செய்தி ஆசிரியர் மற்றும் மூத்த நிர்வாகிகள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அத்தோடு கடந்த வாரம் பத்திரிகை அலுவலகங்கள் சோதனை செய்யப்பட்டன. நிறுவனத்துடன் தொடர்புடைய சொத்துக்களும் முடக்கப்பட்டன.
இதனையடுத்து ஆப்பிள் டெய்லி நிர்வாகம் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தனது அச்சுப்பிரதியை நிறுத்துவதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று வியாழக்கிழமை இறுதி அச்சிப்பிரதியாக ஆப்பிள் டெய்லி நாளிதழ் ஒரு மில்லியன் பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகையில் இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப், இந்த பத்திரிகை மூடப்பட்டிருப்பது "ஹாங்காங்கில் கருத்து சுதந்திரத்திற்கு சிலிர்க்க வைக்கும் அடி" என்று கூறியுள்ளார்.