அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட டிரம்பின் வெற்றி உறுதிசெய்யபடவுள்ள நிலையில், "கடவுள் ஒரு காரணத்திற்காக என் உயிரைக் காப்பாற்றினார்" என்று மக்கள் தனக்கு கூறுகிறார்கள் என டிரம்ப் எனக்குறிப்பிட்டார்.
வெஸ்ட் பாம் கடற்கரையில் மேடையில் இருந்த டிரம்ப் தனது ஆதரவாளர்களைப் பார்த்துப் பேசுகையில் அவர் மேலும் "அந்தக் காரணம், நம் நாட்டைக் காப்பாற்றி, அமெரிக்காவை மகத்துவமான காலகட்டத்திற்கு மீட்டெடுப்பதாகும். இப்போது அதற்கான அங்கீகாரத்தை மக்கள் தந்திருக்கின்றார்கள். நாங்கள் இந்த பணியை ஒன்றாக முடிப்போம்." என்றார்.
அமெரிக்கத் தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்து, வாக்குகள் எண்ணும் பணிகள் முடிவுற்ற நிலையில், இப்பதவிக்காக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி, முறையே 277, 224 இடங்களை வெற்றி கொண்ட நிலையில், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியா டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார் என்பது நிரூபனமாகியுள்ளது. இந் நிலையில் உலகத் தலைவர்கள் பலரும் டிரம்ப்பின் வெற்றிக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பத் தொடங்கியுள்ளனர்.
"அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் மறுபிரவேசம் செய்யும் டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார மறுபிரவேசத்தை நாங்கள் முன்னெடுப்போம்" என்று துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜே.டி.வான்ஸ் கூறினார்.
டிரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் இதுவரை 224 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.