நேற்று பசுபிக் கடலுக்குள் எரிமலை வெடித்து சிதறியது.
இதனால் ஏற்பட்ட சுனாமி டோங்கா நாட்டை தாக்கியது. இதன் தொடர்பாக ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்காக நியூசிலாந்து டோங்காவுக்கு விமானத்தை அனுப்பியுள்ளது.
இந்த எரிமலை வெடிப்பினால் பசிபிக் தீவுகள் கரும்புகை மற்றும் சாம்பலினால் சூழ்ந்துள்ளதுடன், அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. அங்கு 80,000 பேர் வரை பாதிக்கப்படலாம் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், சுனாமி "குறிப்பிடத்தக்க சேதத்தை" ஏற்படுத்தியதாக கூறினார்.
இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும்; இருப்பினும், தகவல் பற்றாக்குறையாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கு கண்காணிப்பு விமானங்களை டோங்காவுக்கு அனுப்பியுள்ளன.