ஆசியாவின் பொருளாதார வளங்கள் 2022 - 2023ல் மேலும் வளர்ச்சியும் என்றும், முறையே நடப்பாண்டில் 5.2 சதவீதமும், அடுத்த ஆண்டில் 5.3 சதவீதமும் வளர்ச்சியடையும் என ஆசிய வளர்ச்சி வங்கி நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
கோவிட் -19 பெருந் தொற்றுக் காரணமாக, கிழக்கு ஆசியா, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா பிராந்திய நாடுகளில், பின் தங்கியிருந்த பொருளாதார வளர்ச்சி, தொற்றுநோய்க்கு முந்தைய வளர்ச்சி விகிதங்களுக்கு இந்த ஆண்டுகளில் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிராந்தியத்தின் வலுவான பொருளாதார வளர்ச்சி நோக்கிற்குச் சவாலாக, , உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, கோவிட்-19 இன் மறுபிறழ்வுத் தொற்றுக்ககள் மற்றும் அமெரிக்காவில் வட்டி விகித உயர்வு உள்ளிட்ட அபாயங்கள் உள்ளதாகவும், ஆசிய வளர்ச்சிக் கண்ணோட்டத்தின் 2022 ம் ஆண்டுக்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை புதிய வளர்ச்சி வேகத்தைத் தடம் புரளச் செய்யலாம். ஆதலால் பிராந்தியத்தில் உள்ள அரசாங்கங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் இந்த அபாயங்களை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க தயாராக இருக்க வேண்டும். நிதி அதிகாரிகளும் தங்கள் பணவீக்க நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை சுட்டுகிறது.
பிராந்தியத்தின் முக்கிய பொருளாதார வளர்ச்சிநிலை முன்னறிவிப்பின்படி, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள சீனா 2021 இல் 8.1 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சீனா இந்த ஆண்டு 5.0 சதவீதமும், 2023ல் 4.8 சதவீதமும் வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா இந்த ஆண்டு 7.5 சதவீத வளர்ச்சியையும், 2023ல் 8.0 சதவீதத்தையும் எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.