இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர்களுக்கு புதிய சம்பளக் கட்டமைப்பும், செயல்திறன் அடிப்படையிலான புதிய ஊக்கத்தொகை மற்றும் பதவி உயர்வு முறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இருதரப்பு கடனாளர்களுடனான இலங்கை அரசாங்கத்தின் வெற்றிகரமான கடன் நிலைத்தன்மை செயல்முறையானது நாட்டிற்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்களின் நன்மையை வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு தெமட்டகொடையில் டிபென்டரைப் பயன்படுத்தி இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான இறுதி மறுசீரமைப்பு உடன்படிக்கையை இலங்கை தனது இருதரப்பு கடன் வழங்குனர்களின் உத்தியோகபூர்வ கடன் குழுவுடன் இன்று பிரான்சின் பாரிஸில் எட்டியுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளனர்.