தடைப்பட்ட திட்டங்களை ஆரம்பிக்க, கொழும்பு இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்தை (LRT) ரத்து செய்ததற்காக இலங்கை செலுத்த வேண்டிய பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, இலங்கையில் சுற்றுலாத்துறையின் புத்துயிர்ப்பு 2024 ஆம் ஆண்டில் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்றும், இதன் மூலம் 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் என கணித்துள்ளார்.
2023 நவம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகங்கள் ஊடாக, இலங்கை அரசாங்கம் (GOSL) நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் ஊடாக செயற்படுவதுடன், இலங்கையில் உள்ள தனது பங்குகளை பிரித்தெடுப்பதற்கு சாத்தியமான முதலீட்டாளர்களிடமிருந்து தகுதிக்கான கோரிக்கையை (RfQ) கோரியது.
தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் தாள் மூன்று மொழிகளிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பஸ்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என சுற்றுலா, காணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார்.