free website hit counter

இலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் காரணமாக, நாடு முழுவதற்குமான அவசரகாலச்சட்டம் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் மூலம் நேற்று முதல் இந்த அவசரகாலச் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஆத்திரமடைந்த மக்கள், நேற்றிரவு 10 மணியளவில், மிரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்குச் சமீபமாக, வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக இன்று இரவு கூடிய மக்கள், ஜனாதிபதிக்கும் அரசுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இலங்கைத் தலைநகர் கொழும்பில், அதிக வீதப் பணப்பரிவர்த்தனை செய்த தனியார் நாணய மாற்று நிலையங்கள் சிலவற்றின் அனுமதியை இலங்கை மத்திய வங்கி ரத்துச் செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.

மரண தண்டணை விதிக்கப்பட்டிருந்த இரத்தினபுரி மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளதாக ஜோன் ஹொப்கின்ஸ்(The Johns Hopkins University) பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பெல்மடுல்ல பிரதேசத்தில் உள்ள கிரிதிஎல அணைக்கட்டில் இருந்து சிறுவன் ஒருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …