free website hit counter

அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி செயலாளர் வழங்கியுள்ள முக்கிய உத்தரவு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவால் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அரசாங்கம் அல்லது அரச அதிகாரிகள் தரப்பினராகும், நீதித்துறை விவகாரங்கள் அல்லது அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்கள் அல்லது அதற்கு கீழ்மட்ட அதிகாரிகளினால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதம நீதியரசர் உட்பட உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீதிச் சேவை ஆணைக்குழு அல்லது நீதித்துறை அதிகாரிகளுக்கு நேரடி கடிதப் பரிமாற்றங்கள் தவிர்க்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்களுக்கு இன்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும், இந்த விடயங்கள் தொடர்பாக, தாபன விதிக்கோவையின் XXVII அத்தியாயத்தின் ஏற்பாடுகள் மற்றும் அது தொடர்பான பொது நிர்வாக சுற்றறிக்கையின் விதிமுறைகளின்படி சட்டமா அதிபர் திணைக்களத்துடன் மாத்திரம் கடிதப் பரிமாற்றங்களைச் செய்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் அல்லாத வேறு விடயங்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கடித தொடர்பு மேற்கொள்ளப்படுவதாயின், அந்த கடிதப் பரிமாற்றங்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படல் வேண்டும்.

நீதித்துறை அமைச்சு அல்லது பிற அரச நிறுவனங்களினால் தமது விடயதானத்துடன் கூடிய அன்றாட சாதாரண நிர்வாக விடயங்கள் தொடர்பாக, நீதிச் சேவை ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு இடையிலான கடிதப் பரிமாற்றங்களுக்கும் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் தொடர்பாக நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்படும் முறைப்பாடுகளுக்கும் இந்த சுற்றறிக்கையின் விதிகள், பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction