இன்று (15) முதல் மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
“மேல்மாகாணத்தில் முதல் கிலோமீட்டருக்கு பயணி ஒருவரிடமிருந்து அதிகபட்சமாக 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டாவது கிலோமீட்டருக்கு ரூ.90 கட்டணம். கூடுதலாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை, இந்த கட்டணங்களில் 15% கூடுதல் கட்டணம் சேர்க்கப்படும். அவர் மேலும் கூறினார்.
முச்சக்கர வண்டிக் கட்டணங்களில் ஏதேனும் முரண்பாடுகள் இருப்பின் பொலிஸ், நுகர்வோர் அதிகாரசபை அல்லது மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை போன்ற உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யுமாறு சங்கத்தின் தலைவர் மேலும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். (நியூஸ் வயர்)