free website hit counter

இடைநிறுத்தப்பட்ட 2024 A/L தேர்வு நாளை மீண்டும் தொடங்குகிறது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அண்மைக்கால பாதகமான காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 2024 G.C.E உயர்தரப் பரீட்சை நாளை (டிச. 04) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

2024 A/L பரீட்சை நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமானது, பின்னர் நாடளாவிய ரீதியில் சமூகங்களைப் பாதித்த தீவிர காலநிலை காரணமாக நவம்பர் 27 ஆம் திகதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

அதன்படி, நாளைய தினம் மீண்டும் பரீட்சை ஆரம்பமாகும் எனவும், ஏற்கனவே மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழமையான நேர அட்டவணையின்படி பரீட்சை தொடரும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பரீட்சை இடைநிறுத்தப்பட்ட திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்ட பாடங்கள் எதிர்வரும் நாட்களில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

குறித்த திகதிகள் தொடர்பான புதிய நேர அட்டவணை எதிர்வரும் நாட்களில் பரீட்சை நிலையங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் என ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula