யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் விசிட் விசாவில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் செல்ல முயன்ற போது உக்ரைனுக்கு எதிரான போரில் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படும் செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கையர்களை ரஷ்யாவிற்கு அனுப்பும் உள்ளூர் பயண முகவர் நிலையங்கள் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள் எதனையும் பெறவில்லை என்று கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் நேற்று கூறியது.
கடந்த இரண்டு வருடங்களாக உக்ரைனுக்கு எதிரான போரில் பல இளைஞர்களுடன் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்ட தனது மகனை மீட்குமாறு யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவர் பொலிஸாரிடம் முறையிட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. .
மூன்று பிள்ளைகளின் தந்தை உட்பட ஆறு இளைஞர்கள், ரஷ்ய இராணுவத்தில் கூலிப்படையாக பணியாற்றுவதற்காக வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இளைஞர்களை இரகசியமாக ஆட்சேர்ப்பு செய்த போலி பயண முகவரால் ஏமாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், ரஷ்ய தூதரகம், ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரியமாக நட்புறவுகளை இழிவுபடுத்தும் நோக்கில் சரிபார்க்கப்படாத தரவுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வலியுறுத்தியுள்ளது.
"ரஷ்ய அதிகாரிகள் எங்கள் நாட்டிற்கு வரும் அனைத்து வெளிநாட்டினரையும் மதிக்கிறார்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம், திறன்கள் மற்றும் கிடைக்கக்கூடிய காலியிடங்களின் அடிப்படையில் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க தயாராக உள்ளனர்" என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் உள்ள இலங்கை பிரஜைகள் தொடர்பான பிரச்சினைகளை மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகம் முதன்மையாகக் கையாள்வதாகத் தெரிவித்த தூதரகம், இலங்கையர்களை ரஷ்யாவிற்கு அனுப்பும் உள்ளூர் பயண முகவர் நிலையங்கள் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள் எதனையும் பெறவில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தியது.
எவ்வாறாயினும், இலங்கை அதிகாரிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டால், அத்தகைய நடவடிக்கைகளை விசாரிப்பதில் உதவுவதற்கு தூதரகம் விருப்பம் தெரிவித்தது.
கடந்த வருடத்தில், ரஷ்யா-உக்ரைன் மோதலில் போரிடுவதற்காக போர் வீரர்கள் உட்பட தனிநபர்கள் ஏமாற்றும் வகையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவது இலங்கையில் அதிகரித்துள்ளது. முன்னாள் அரசாங்கம் பல போர் வீரர்கள் மற்றும் தனிநபர்களை உள்ளடக்கிய ரஷ்யாவிற்கு கூலிப்படை குழுக்களில் சண்டையிட அனுப்பப்பட்ட மனித கடத்தல் மோசடிகளை கண்டுபிடித்தது.
ரஷ்யா - உக்ரைன் போரில் இலங்கையர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவதாக உறுதியளித்து அவர்களை அனுப்பியதற்காக ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது பாதிக்கப்பட்ட பலர் இந்த மோசடிகளுக்கு இரையாகியதாக கூறப்படுகிறது.