free website hit counter

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இன்று (நவம்பர் 22) பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி விக்ரமசிங்க இரண்டு தேர்தல்களும் மேலும் பிற்போடப்பட மாட்டாது என உறுதியளித்தார்.

“தேர்தலை நடத்த நாங்கள் பயப்படுகிறோம் என்று எப்படிச் சொல்ல முடியும்? தேர்தல்கள் நடத்தப்படும். ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம் நடைபெறும்” என்று அவர் கூறினார்.

சகல உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களையும் அடுத்த வருடம் நடத்த முடியும் என தெரிவித்த ஜனாதிபதி, அதனை நடத்துவதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனவும் தெரிவித்தார்.

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: