free website hit counter

பட்ஜெட் 2024 : 2வது வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று 45 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
2024 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் 25 எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP) 2024 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆகியவை அதற்கு எதிராக வாக்களித்த அரசியல் கட்சிகளில் அடங்கும்.

2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நவம்பர் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction