உத்தேச புதிய கல்விச் சீர்திருத்தங்களை வெளியிட்ட கல்வி அமைச்சு, பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13ல் இருந்து 12 ஆகக் குறைக்கும் நோக்கம் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், ஒவ்வொரு குழந்தையும் 17 ஆண்டுகளில் பள்ளியை முடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, முன்பள்ளிக் கல்வியானது 4 வயது வரை, முதன்மைப் பிரிவு 1-5, இளைய பிரிவு 6-8 மற்றும் மூத்த பிரிவு 9 முதல் 12 என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு பாடசாலை அடிப்படையிலான மதிப்பீட்டில் குறிப்பிட்ட சதவீத புள்ளிகளையும் பரீட்சைகளில் குறிப்பிட்ட சதவீத புள்ளிகளையும் வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ள அதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலகுபடுத்துவதற்கும் போட்டியை இல்லாமல் செய்யவும் கல்வி அமைச்சு முன்மொழிந்துள்ளது என கூறினார்.
மேலும், உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்களின் ஊடாக, கல்வி அமைச்சு பொதுப் பரீட்சையை தரம் 10 இல் நடத்துவதற்கும், உயர்தரப் பரீட்சை தரம் 12 இல் நடத்துவதற்கும் முன்மொழிந்துள்ளது. O/L பாடங்களின் எண்ணிக்கையை 9 இலிருந்து 7 ஆக குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.