இலங்கையில் டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் நபர்கள் மூலம் இந்த திரிபு பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் கூறுகையில் பொதுமக்களின் செயற்பாடு காரணமாக நாட்டில் டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம் உள்ளதாகவும் சுகாதார விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவது அவசியமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் டெல்டா பிளஸ் திரிபு குறித்து மாதிரிகள் ஊடாக பரிசோதனைகள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான நபர்களில் 12 பேர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 574 ஆக அதிகரித்துள்ளது.