சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்றத்தில் எஞ்சியுள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனங்களை நிரப்புவதற்கு பரிந்துரைக்கப்பட்ட நான்கு பெயர்களை இறுதியாக அறிவித்துள்ளது.
இதன்படி, எஞ்சியுள்ள நான்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு மனோ கணேசன், நிசாம் காரியப்பர், சுஜீவ சேனசிங்க மற்றும் மொஹமட் இஸ்மாயில் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நவம்பர் 14 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, SJB ஐந்து தேசியப் பட்டியல் MP இடங்களைப் (போனஸ் ஆசனங்கள்) பெற்றது.
நவம்பர் 19 அன்று, சமகி ஜன பலவேகய (SJB) இன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, SJB இன் தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றிற்கு நியமிக்கப்பட்டார், அதே நேரத்தில் மீதமுள்ள நான்கு ஆசனங்கள் தொடர்பான விவாதங்கள் இன்று வரை தொடர்ந்தன.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) நிசாம் காரியப்பரின் பெயரைச் சேர்க்காமல் சமகி ஜன பலவேகய (SJB) தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களை சமர்பிப்பதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
SLMC தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.