அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தேவையான அரிசியை அரசாங்கம் இறக்குமதி செய்யாவிட்டால் நாடு பாரிய அரிசி தட்டுப்பாட்டைச் சந்திக்க நேரிடும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க, அரிசி தட்டுப்பாட்டைத் தீர்க்க அரசாங்கம் நீண்டகால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
“அரசாங்கம் நீண்ட கால தீர்விற்கு செல்ல வேண்டும்.இல்லையென்றால் நாடு மற்றுமொரு நெருக்கடியை சந்திக்க நேரிடும்.நெல் சந்தைப்படுத்தல் சபை இந்த நெருக்கடியை போக்குவதற்கு ஒரு முறையான வேலைத்திட்டத்தை தயாரித்து யால பருவத்திற்கான நெல்லை கொள்வனவு செய்ய வேண்டும், இவ்வாறான சூழ்நிலையில் சந்தையில் அரிசிக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படலாம்” என சேமசிங்க எச்சரித்துள்ளார்.
பீர் மற்றும் கால்நடை தீவன உற்பத்திக்கான அரிசி விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியமான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வெள்ளத்தினால் சேதமடைந்த நெற்செய்கைகளுக்கு நட்டஈடு வழங்குவதற்குப் பதிலாக அவற்றை மீள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் விவசாயப் பணிப்பாளர் கே.பி.குணரத்ன தெரிவித்துள்ளார்.