பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் உள்ள கடற்படை மற்றும் பல நாள் மீனவர் சமூகங்களுக்கு.
எனவே, கீழே உள்ள வரைபடத்தில் ‘சிவப்பு’ நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக கரையோரங்களுக்கு திரும்பவும் அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால கணிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
![red-alert-issued-over-strong-winds-and-rough-seas-sri-lanka](https://i.ibb.co/tQzw0vT/Capture.jpg)