இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சிறிது நேரத்திற்கு முன்பு சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.
இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சீன நேரப்படி மாலை 5.00 மணிக்கு (உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணி) மக்கள் மண்டபத்தில் தொடங்கியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி திசாநாயக்க தற்போது சீனாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.