free website hit counter

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இரண்டு பௌத்த பிக்குகள் பொலிஸாரால் கைது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரம்புக்கனை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் பௌத்த பிக்கு ஒருவர் மகசீன்கள் (2 T-56)மற்றும் 161 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரை நேற்று(19.10.2023) ரம்புக்கனை பொலிஸார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் ஹொரண பௌத்த பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் பிக்கு என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேகத்திற்குரிய மாணவ பிக்கு வசிக்கும் விகாரையின் விகாரை மடாதிபதி வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று இரண்டு மகசீன்கள் மற்றும் தோட்டாக்களுடன் மாணவ பிக்குவை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக, 850 கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், விகாரை வசித்து வரும் மற்றுமொரு பௌத்த பிக்குவும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில்பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction