free website hit counter

இலங்கையில் Hindu போட்ட குண்டு !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார அரசியற் குழப்பங்களுக்கு மத்தியில், இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையினைத் தோற்றுவிக்கும் பல்வேறு முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

சென்ற வாரத்தில் குழப்பங்கள் கலவரங்களாக வெடித்திருந்த வேளையில், நீர்கொழும்புப் பகுதியில் திட்டமிட்டவகையில் இனமோதல் ஒன்றினை வெளியிடங்களில் இருந்த வந்தவர்கள் ஏற்படுத்த முனைந்த போது, அதனை மக்களும், அப்பகுதி மதத்த தலைவர்களும் சரியாக இனங்கண்டு அரணாக மாறித் தவிர்த்திருந்தார்கள்.

இவ்வாறான நிலையில் இந்தவாரம் இலங்கையின் தமிழ்பகுதிகளில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலைகள் நினைவு கூரப்படும் தருணத்தில், தமிழ்மக்கள் மேல் பெரும்பாண்மையினம் அச்சம் மற்றும் குரோதம் கொள்ளும் வகையில், இந்தியப் பத்திரிகையான ' The Hindu ' வெளியிட்டுள்ளதாகவும், அதற்கான கண்டனங்கள் பலதரப்பிலும் எழுப்பபபட்டும் வருகின்றன. " இலங்கையின் குழப்ப நிலை காலத்தில் மே 18ல் இலங்கையில் தாக்குதல் ஒன்றினை நடத்துவதற்கு, இந்தியாவில் புலிகள் திட்டமிடுவதாக, இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் பெரும்பாண்மைச் சமூகத்திடம் சிறுபாண்மைச் சமூகங்கள் குறித்த அச்சநிலையினை வைத்தே சிங்களப் பெரும்பாண்மை ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக முன்னாள் பிரதமர் மஹிந்தராஜபக்‌ஷ மற்றும் அவரது சகோதரர்களின் ஆட்சியதிகாரம் இவ்வாறான அச்சமூட்டலினாலேயே கட்டமைக்கப்பட்டிருந்தன என்ற குற்றச்சாட்டு பலமாக உள்ளது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் நெருங்கிய நண்பரும், அவரினால் இந்தியப் பாணியிலான, இலங்கையின் முக்கிய விருதான 'இலங்காரத்னா' விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பெற்ற, பத்திரிகையாளர் ராம் அவர்களது நிர்வாக இயக்கத்தில் வெளிவரும் "The Hindu" பத்திரிகையின் மூலம், வெளிவந்துள்ள இந்தச் செய்தி இனத்துவேசம் பரப்பும் ஒரு நடவடிக்கை எனும் கண்டனங்கள் பலதரப்பிலும் எழுந்துள்ளன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction