free website hit counter

தெற்காசியாவிலேயே மிக உயரமான சுழலும் உணவகம் கொழும்பில் திறக்கப்படவுள்ளது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தெற்காசியாவிலேயே மிக உயரமான சுழலும் உணவகம் கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் இந்த வாரம் திறக்கப்பட உள்ளது.
புதன்கிழமை (டிசம்பர் 06) கொழும்பு தாமரைக் கோபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ‘Obit by Citrus’ திறப்பு விழா அறிவிக்கப்பட்டது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் உணவகத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அதன்படி, தெற்காசியாவிலேயே மிக உயரமான தனித்து நிற்கும் கட்டமைப்பான மற்றும் தெற்காசியாவின் இரண்டாவது உயரமான கட்டமைப்பான கொழும்பு தாமரை கோபுரத்தில் ‘Obit by Citrus’ சனிக்கிழமை (டிசம்பர் 09) திறந்து வைக்கப்படும்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் திலும் அமுனுகம, கடந்த 15 மாதங்களுக்குள் கொழும்பு தாமரை கோபுரம் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது.

195 மீற்றர் உயரத்தில் abseiling, bungee jumping, paragliding போன்ற விளையாட்டுகள் மூலம் பல புதிய அனுபவங்களை வழங்க சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் மூன்று உள்ளூர் நிறுவனங்கள் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction