விளம்பர நோக்கங்களுக்காக 12 வயதுக்குட்பட்ட சிறார்களை பயன்படுத்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை அரசாங்கம் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது.
12 வயதுக்குட்பட்ட சிறார்களை விளம்பர நோக்கங்களுக்காக பயன்படுத்துவது அடுத்த வருடம் முதல் தடை செய்யப்படுவதாக வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி ஹன்சக விஜேமுனி அறிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த தடை 2025 ஜனவரி 01 ஆம் திகதி அமுலுக்கு வரும்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டு வருவதாக கலாநிதி ஹன்சக விஜேமுனி மேலும் தெரிவித்தார். (நியூஸ்வயர்)