இலங்கையில் கொரோனா வைரஸின் மாறுபாடான டெல்டா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புக்களை மக்கள் கொடுப்பார்களேயானால், அது மிகத்தீவிரமாகப் பரவும் என வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், டெல்டா மாறுபாடு தற்போது உலகின் 96 நாடுகளில் பரவியுள்ளது. டெல்டா வைரஸ் தொற்றின் போது, நோய் அறிகுறிகள் இலகுவில் தென்படுவதில்லை. ஆயினும் நோயின் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆதலால் கொரோனா வைரஸ் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது, மக்கள் அவதானமுடனும், தளர்வுகளை அத்தியாவசியத் தேவைகளுக்காக மாத்திரமும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.