ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவதைப் பார்ப்பதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறியுள்ள PAFFREL, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தபால்மூல வாக்களிப்புக்கு ஒரு நாள் முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளமை குறித்து மாத்திரமே கவலையடைவதாகத் தெரிவித்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரசாங்க ஊழியர்கள் 10000 ரூபா சம்பள உயர்வைக் கோரியபோது அரசாங்கம் அவர்கள் மீது முழுக்க முழுக்க பாராமுகமாக இருந்ததை அந்த கடிதத்தில் PAFFREL நினைவு கூர்ந்துள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து இது நடைமுறைக்கு வரும்போது, மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.20 பில்லியனை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
நாட்டின் மோசமான பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவின் சாத்தியக்கூறு குறித்தும் PAFFREL கேள்வி எழுப்பியுள்ளது.