free website hit counter

மத்திய வங்கியின் வட்டி வீதம் குறைப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கை.
மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் நேற்று (05) இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களை 200 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 11 சதவீதம் மற்றும் 12 சதவீதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சட்டரீதியான கையிருப்பு வீதத்தை நிலவும் 4.00% அளவிலேயே பேணுவதற்கு நாணயச் சபை தீர்மானித்துள்ளது.

இதேவேளை கடந்த மே மாதம் 31 ஆம் திகதியன்று இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தனது கொள்கை வட்டி வீதங்களை பாரியளவில் குறைக்க தீர்மானித்திருந்தது.

அதன்படி இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) முறையே 250 அடிப்படை புள்ளிகளால் 13.00 சதவீதம் மற்றும் 14.00 சதவீதம் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction