இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அசோக ரன்வாலா தனது கல்வித் தகுதி தொடர்பான சர்ச்சையை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
NPP பாராளுமன்ற உறுப்பினர் இன்று (13) விசேட அறிக்கையொன்றை விடுத்து இந்தத் தீர்மானத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த இரண்டு நாட்களாக தனது கல்வித் தகைமை தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். தனது கல்வித் தகைமை தொடர்பில் தாம் ஒருபோதும் பொய்யான அறிக்கையை வெளியிடவில்லை என ரன்வல உறுதியளித்துள்ளார்.
எவ்வாறாயினும், தனது கல்வித் தகைமைகளை உறுதிப்படுத்த தேவையான சில ஆவணங்கள் தற்போது தன்னிடம் இல்லையெனவும், உரிய நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த ஆவணங்களை தற்சமயம் அவசரமாக சமர்ப்பிப்பது கடினம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
தமக்கு கலாநிதி பட்டம் வழங்கிய ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து உரிய ஆவணங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனினும் கூடிய விரைவில் அவற்றை முன்வைக்க உத்தேசித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரன்வல மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் மற்றும் எம்மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக, நான் பாராளுமன்ற சபாநாயகர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளேன்,'' என்றார்.