website analysis

2030ல் - சுற்றுலாத்துறையில் 4மில்லியன் பயணிகள் - 8 பில்லியன் வருவாய் இலக்கு !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையின் அந்நியச் செலவாணி வருவாயில் தற்போது முக்கிய இடத்தை வகிப்பது சுற்றுலாத்துறையாகும். இதன் மூலமான அந்நியச் செலவாணி வருவாயாக, 2030 ம் ஆண்டளவில்,  ஆண்டிற்கு 8 பில்லியன் டொலர் வருவாய் இலக்கை இலங்கை அரசு நோக்காகக் கொண்டுள்ளதென  எனப் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மேல் மாகாண சபை மண்டபத்தில் நடைபெற்ற  உலக சுற்றுலா தின விழா 2026 ல் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த வருவாயைப் பெறுவதற்காக, ஆண்டிற்கு 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் செயல்திட்டங்களையும் முன்னிலைப்படுத்துவதாக  தெரிவித்தார்

இந்த இலங்குகளை முன்னிறுத்தியே, 2026 வரவு செலவுத் திட்டத்தில், சுற்றுலா தொடர்பான  பல்வகைத் திட்டங்களுக்கான  நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை மட்டத்தில் சுற்றுலாச் சங்கங்கள், மற்றும்  கல்விச் சீர்திருத்தங்களளில்  சுற்றுலாத் துறையை  தொழிற்துறையாக மாணவர்கள் கற்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்கவுள்ளதாகவும், பிரதமர் தெரிவித்துள்ளார். 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்