free website hit counter

வட மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகன் பதவியேற்றார்.

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வட மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகன்  அவர்கள் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மிக எளிமையான முறையில் நடைபெற்ற இப் பதவியேற்பு வைபவத்தின் பின், ஊடககங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், “ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல். தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதியால் நாம் எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும். இவர் ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் இந்த பதவியை பெற்றுக் கொள்கிறேன். அத்துடன் வேறொருவர் எனக்குப் பதவியை தந்திருந்தாலும் நான் இதனை ஏற்றுக் கொண்டிருக்கவும் மாட்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

ஊழலுக்கு எதிராக புதிய அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகளில் நம்பிக்கை தரும் ஒரு விடயம் நா.வேதநாயகம் அவர்களின் வட மாகாண ஆளுநர் பதவிக்கான நியமனம் இருப்பதாக யாழில் கருத்துக்கள் தெரிவிக்கபடும் அதேவேளை, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் குறிப்பிட்டு இருப்பது நல்ல மனிதர்கள் ஜனாதிபத அனுரவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம் எனக் குறிப்பிடலாம். 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction