free website hit counter

இலங்கையில் சட்டம் ஒழுங்கு பேணப்படாவிட்டால் .. - மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை.

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் சட்டம் ஒழுங்கு சரியாகச் செயற்படாது போனால் நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாதென மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவிக்கும் போது " இலங்கையில் நிலையான ஆட்சி முறைமையும், அரசாங்கமும் கூடிய விரைவில் நியமிக்கப்பட வேண்டும். 225 மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதியின் முன் இன்றுள்ள முக்கிய பொறுப்பு இதுவாகும். நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை சிறந்த முறையில் பேணக்கூடிய அரசாங்கம் ஒன்றை நியமிப்பது மிகவும் அவசியமானது. குறுகிய காலத்தில் இவ்வாறான ஸ்திரமான நிலைமையை ஏற்படுத்த முடியாவிட்டால் நாடு பெரும் சிக்கலை எதிர்நோக்கும்" என எச்சரித்துள்ளார்.

இச் சந்திப்பின் போது, அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இரண்டு வாரத்திற்குள் நாட்டின் அரசியல் ஸ்திரமற்ற நிலையில் மாற்றம் ஏற்படவில்லையெனில் தான் பதவி விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளுக்கான செயலாளர்களை ஜனாதிபதி உடனடியாக நியமித்துள்ளார். ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களுக்கேற்ப, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction