இலங்கையில் வருட இறுதி மற்றும் பண்டிகைக் கால விடுமுறையின் பின்னதாக இன்று முதல் நாடளாவிய ரீதியில் சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையான கல்வி நடவடிக்கைகளை சாதாரண நடைமுறைகளுக்கமைய முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவரத்னவினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்ட நிலையில் பாடசாலைகள் ஆரம்பமாகின்றன.
ஆயினும், பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகளை திறக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது. சுகாதார விதிமுறைகளுக்கு அமைவான அனுமதிகள் கிடைக்கப்பெற்றவுடன் சிற்றுண்டிச்சாலைகளைத் திறப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அதுவரை மாணவர்கள் தமக்குத் தேவையான உணவுகளை கொண்டுவர வேண்டும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளதாகவும் அறியவருகிறது.