இலங்கை நாட்டின் அமைச்சர்கள் தமது ஆகஸ்ட் மாத சம்பளத்தை அரசாங்கத்தின் கோவிட் -19 நிதிக்கு வழங்க தீர்மானித்துள்ளார்கள்.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது. முன்னதாக, முக்கிய எதிர்க்கட்சியான SJB மற்றும் SLFP ஆகியவை தங்கள் எம்.பி.க்கள் தங்கள் ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்குகின்றோம் என அறிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும் அமைச்சர் பியால் நிஷாந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், நிதிச் சிக்கல்கள் காரணமாக தனது மாதச் சம்பளத்தை நன்கொடையாக வழங்க முடியவில்லை என்று கூறினார். அவர் தனது சம்பளத்திலிருந்து கடன்களை செலுத்த வேண்டும், அதனால் பங்களிக்க கடினமாக உள்ளது என்று அமைச்சர் விளக்கினார்.