ஆளும் ராஜபக்ஷ அரசாங்கம் இலங்கையை சீனாவின் கொலணியாக்கிவிட்டது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம், தாய் நாடு காட்டிக் கொடுக்கப்பட்டிருப்பதாகும் அவர் குறிப்பிட்டள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, "அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த நாடு பெரும் போராட்டங்களுக்குப் பின்னர், 1948ஆம் ஆண்டு விடுதலை அடைந்தது. ஆனால், கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தினை நிறைவேற்றிதன் மூலம் சீனாவின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக நாட்டை மாற்றிவிட்டார்கள். இந்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கியதன் மூலம் சுதந்திரக் கட்சியும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நாட்டை காட்டிக் கொடுத்திருக்கிறார்கள்." என்றுள்ளார்.