free website hit counter

வெள்ளையடித்தார்கள் வெள்ளையர்கள்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைப்பெற்றது.

பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சார்பாக அணித்தலைவர் பாபர் அசாம் (Babar Azam) 139 பந்துகளுக்கு 158 ஓட்டங்களையும், மொஹமட் ரிஸ்வான்(Mohammad Rizwan) 58 பந்துகளுக்கு 74 ஓட்டங்களையும் மற்றும் இமாமுல் ஹக் (Imam-ul-Haq) 73 பந்துகளுக்கு 56 ஓட்டங்களையும் எடுத்திருந்தார்கள். இங்கிலாந்து அணி சார்பாக பிரைடன் கார்ஸ் (Brydon Carse) ஐந்து விக்கெட்களையும், சகிப் மஹ்மூத் (Saqib Mahmood) மூன்று விக்கெட்களையும் மற்றும் மட் பார்கின்சன் (Matt Parkinson) ஒரு விக்கெட்டையும் எடுத்தார்கள்.

பதிலெடுத்தாடிய இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் வின்ஸ் (James Vince) 95 பந்துகளுக்கு 102 ஓட்டங்களையும், லேவிஸ் கிரகரி (Lewis Gregory) 69 பந்துகளுக்கு 77 ஓட்டங்களையும், ஜாக் கிராலி (Zak Crawley) 34 பந்துகளுக்கு 39 ஓட்டங்களையும், பில் சால்ட் (Phil Salt) 22 பந்துகளுக்கு 37 ஓட்டங்களையும், மற்றும் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) 28 பந்துகளுக்கு 32 ஓட்டங்களையும் எடுத்திருந்தார்கள். பாகிஸ்தான் அணி சார்பாக ஹரிஸ் ராவ்ப் (Haris Rauf) நான்கு விக்கெட்களையும், சதாப் கான் (Shadab Khan) இரண்டு விக்கெட்களையும் மற்றும் ஹசன் அலி (Hasan Ali) ஒரு விக்கெட்டையும் எடுத்தார்கள். எவ்வாறாயினும் 12 பந்துகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்றது.

இங்கிலாந்து அணி உலக ஆடவருக்கான ஒரு நாள் கோப்பையை வெற்றிக்கொண்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் முற்றிலும் வேறுப்பட்ட அணியுடன் (அதாவது பிரதான வீரர்கள் தனிமைப்படுத்த நிலையிலும்) பாகிஸ்தானை வீழ்த்தியது மிகவும் பாராட்டத்தக்க விடையமாகும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction