free website hit counter

ரிஷாப் பாண்டிற்கு கொரொனா தொற்று

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ரிஷாப் பாண்டிற்குப் பிறகு, இங்கிலாந்தில் உள்ள இந்தியக் குழுவின் மேலும் நான்கு உறுப்பினர்களுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர்களை லண்டனில் கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டியுள்ளது. இதில் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பாரத் அருண், விக்கெட் காப்பாளர் விருத்திமன் சாஹா, பதில் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் சில பயிற்றுவிப்பு ஊழியர்களும் கொரொனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இந்திய அணி ஐந்து போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துடன் இங்கிலாந்தில் விளையாடவுள்ளது. மேலும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்காக இந்திய அணி டர்ஹமில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அண்மையில் நடந்த இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி அணிகளுக்கிடையிலான யூரோ கிண்ண கால்பந்து போட்டியை நேரில் காண ரிஷாப் பாண்ட் சென்ற போதே கொரொனா தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ரிஷாப் பாண்ட் இந்திய அணி வீரர்கள் தங்கியுள்ள விடுதியில் தங்கவில்லை, இந்திய அணி வீரர்கள் ஒருவருக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை மற்றும் அவர் கொரொனா தொற்றிலிருந்து மீண்டு வருவதாகவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தெரிவிக்கின்றது. மேலும் ரிஷாப் பாண்டிற்கு இரண்டு ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதணைகள் எடுத்த பின்னரே இந்திய அணியில் இணைய முடியும். இதே விதிமுறைப்படியே, தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் பின்பற்றப்படவுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula