இந்தியாவில் சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
இதன் இறுதிப்போட்டியில் இந்திய லெஜன்ட்ஸ் அணியும், இலங்கை லெஜன்ட்ஸ் அணியும் நேற்று இரவு மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா லெஜன்ட்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய சச்சின் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த ரெய்னா 4 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். அதன் பின் நமன் ஓஜாவுடன் வினய் குமார் களம் இரங்கினார். அதிரடியாக ஆடிய வினய் குமார் 36 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். ஆனால் இந்திய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் நமன் ஓஜா அதிரடியாக ஆடி 108 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இறுதியில் இந்திய லெஜன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது.
ஆரம்பம் முதலே இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை கொடுக்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெடுகள் சரிந்தன. இஷான் ஜெயரத்னே மட்டும் தாக்குப்பிடித்து அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 162 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இறுதியில் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக நமன் ஓஜா தேர்வு செய்யப்பட்டார்.
இத்தொடரின் தொடர் நாயகனாக இலங்கை அணி தலைவர் தில்சன் தேர்வு செய்யப்பட்டார்.