ஐபிஎல் 2024 இல் பந்து வீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வழங்குவதற்கு அனுமதிக்கப்படவுள்ளனர். இந்தியாவின் உள்நாட்டு டி20 போட்டியான 2023-24 சையத் முஷ்டாக் அலி டிராபியின் போது இந்த மாற்றம் சோதனை செய்யப்பட்டது என்று ESPN Cricinfo தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 2023ல் முதன்முறையாக கொண்டு வரப்பட்ட இம்பாக்ட் பிளேயர் விதி அப்படியே தொடரும். இந்த விதியின் கீழ், விளையாடும் XI தவிர, ஒரு அணி நான்கு மாற்று வீரர்களை பட்டியலிட வேண்டும். அவர்கள் நான்கு மாற்று வீரர்களில் யாரேனும் ஒருவரை தங்கள் இம்பாக்ட் பிளேயராகப் பயன்படுத்தலாம். 
ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் மே இறுதி வரை விளையாடப்படும். இந்திய பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதிகள் தேர்தல் ஆணையத்தால் இறுதி செய்யப்பட்டவுடன் IPL 2024 இறுதி அட்டவணை அறிவிக்கப்படும்.
																						
     
     
    