free website hit counter

அர்ஜுன ரணதுங்க தலைமையில் இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்காலக் குழு - விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக்காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை இடைநிறுத்துவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு பதிலாக இடைக்கால குழு ஒன்றை நியமிப்பதாக அவர் மேலும் அறிவித்துள்ளார்.

இலங்கையை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இந்த இடைக்காலச் சபை நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் எஸ் ஐ இமாம், ரோஹினி மாறசிங்க, அயிரங்கணி பெரேரா ஆகிய ஓய்வு பெற்ற நீதிபதிகள், உபாலி தர்மதாசா, ஹிஷாம் ஜமால்டின் மற்றும் சட்டத்தரணி ராகிதா ராஜபக்ஷ ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின்படி, விளையாட்டுத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி அமைச்சர் இடைக்காலக் குழுவை நியமித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக்காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றது. தெரிவிக்குழு மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை என்பவற்றின் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்துள்ள நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த அதிரடித் தீர்மானத்தை எடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: