free website hit counter

பாகிஸ்தானை வீழ்த்தி டி20 உலகக்கோப்பையை வென்றது இங்கிலாந்து

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. இறுதிப்போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஷான் மசூத் 38 ரன்கள் சேர்த்தார். கேப்டன் பாபர் ஆசம் 32 ரன்களும், சதாப் கான் 20 ரன்களும் சேர்த்தனர்.

இங்கிலாந்து சார்பில் ஆதில் ரஷீத் 2 ,சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.தொடர்ந்து 138ரன்கள் எடுத்தால் டி20 உலகக்கோப்பையை வெல்லலாம் என்ற நிலையில் இங்கிலாந்து அணி விளையாடியது.

அணியின் துவக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
மறுபுறம் பட்லர் அதிரடியாக விளையாடினார் . பின்னர் பில் சால்ட் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், தொடர்ந்து பட்லர் 32 ரன்களுக்கு ஹாரிஸ் ரவுப் பந்துவீச்சில் வெளியேறினார். பின்னர் பென் ஸ்டோக்ஸ் , ஹார்ரி புரூக் இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் சேர்த்த்னர். புரூக் 20 ரன்களில் ஷதாப் கான் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

தொடர்ந்து ஸ்டோக்ஸ் ,மொயீன் அலி இருவரும் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணியை வெற்றி நோக்கி அழைத்து சென்றனர். சிறப்பாக விளையாடிய ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்தார்.

இறுதியில் 19ஓவர்களில் 5விக்கெட் இழப்பிற்கு 138ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது,இந்த வெற்றியால் இங்கிலாந்து அணி 2022 டி20 உலக கோப்பையை வென்றது.

இறுதி போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடரின் ஆட்டநாயகனாகவும் சாம் கரன் தெரிவானார்.

இங்கிலாந்து அணிக்கு இது 2வது டி20 உலகக்கோப்பை ஆகும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction